Img விஜய்யின் ஜில்லா பட டிரெய்லர் நாளை ரிலீஸ் vijay jilla movie trailer release in tomorrow
ஜில்லா படம் பொங்கலையொட்டி வருகிற 10–ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 600–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுகின்றனர். இப்போது படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் 'கண்டாங்கி கண்டாங்கி' என்ற பாடலை சொந்த குரலில் பாடி உள்ளார். இந்த பாடலை இணைய தளங்களில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டு உள்ளனர்.
இது சாதனையாக கருதப்படுகிறது. படம் ரிலீஸ் தேதி நெருங்குவதை தொடர்ந்து 'ஜில்லா' படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது. 'ஜில்லா' படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மோகன்லால், பூர்ணிமா ஜெயராமும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.
இப்படத்தின் சிறப்பு காட்சியை மோகன்லால் மனைவி பார்த்து விட்டு விஜய் உள்ளிட்ட அனைவருக்கும் போன் செய்து பிரமாதமாக வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
...