Thursday, December 5, 2013

Surya and Venkat prabhu waitting for Vijay in next movie சூர்யா – வெங்கட் பிரபு கூட்டணி! விஜய்க்காக வைட்டிங்!

Surya and Venkat prabhu waitting for Vijay in next movie
சூர்யா – வெங்கட் பிரபு கூட்டணி! விஜய்க்காக வைட்டிங்!

Surya and Venkat prabhu waitting for Vijay in next movie

மங்காத்தா திரைப்படம் ரிலீஸாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு அமோகமான வரவேற்பு. இதை மிஞ்சும் விதத்தில் கார்த்தியின் அண்ணனான சூர்யாவுடன் அடுத்த திரைப்படத்தில் இணைகிறார் வெங்கட்பிரபு.

சூர்யா எப்போதுமே தான் நடிக்கும் திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்வார். தன் மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் அந்த திரைப்படத்திலிருந்து உடனே விலகிவிடுவார்.(கௌதம் மேனன் கூட்டணி முறிந்ததும் இந்த விதத்தில் தான்). கதைக்காக தன்னை அற்பனித்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ஒரு படத்தில் நடித்தால், இயல்பாகவும் ஜாலியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது சூர்யாவின் விருப்பம். அதனால் தான் தற்போது கமிட் ஆகியுள்ள லிங்குசாமியின் திரைப்படம் முடிந்ததும் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறது திரையுலகம்.

வெங்கட் பிரபுவின் வழக்கமான டெக்னிகல் டீம், மியூசிக்கல் டீம்(யுவன் ஷங்கர் ராஜா) , காமெடி டீம்(பிரேம்ஜி அமரன்) என வழக்கமான பட்டாளத்துடன் களமிறங்குகிறாராம் வெங்கட் பிரபு. சூர்யாவுடன் இணைவது குறித்து டுவிட்டரில் வெங்கட் பிரபு கூறியபோது 'நீங்கள் அடுத்த படம் விஜய்யுடன் பன்றீங்க…. பன்னணும்' என விஜய் ரசிகர்கள் அன்புக் கட்டளை(!) விதிக்க 'நான் அதுக்குதான் ப்ரோ வைட் பண்ணிகிட்டு இருக்கேன்' என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.

shared via Surya and Venkat prabhu waitting for Vijay in next movie

No comments:

Post a Comment

Popular Posts